திருச்சி மாநகர் மதுரை ரோடு வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சனம், புனித நீர் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து வாஸ்து சாந்தி முதலிய பூர்வாங்க பூஜைகளோடு முதல் கால யாகசாலை துவங்கி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று காலை கோ பூஜையுடன் இரண்டாம் காலயாக பூஜை துவங்கி 9.45 மணிக்கு செல்வ விநாயகர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் .
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் வேலு பாய்ஸ் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.