திருச்சி மாவட்டத்தில் மெத்தனால் ஒரு துளி கூட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறவில்லை – ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி!

0

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுக்காப்பு துறை மற்றும் பள்ளிகல்வித் துறை சார்பாக போதைப்பொருள் எதிர்ப்புகுழு என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்….

- Advertisement -

மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் போதைப்பொருள் எதிர்ப்பு குழு செயல்படும். திருச்சியில் 434 பள்ளிகளில் இருந்து போதை பொருள் குறித்த தகவலையும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வாட்ஸ் அப் மற்றும் டோல் ஃப்ரீ நம்பர் கொடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நிறுத்தும் வரை சோதனை தொடரும். மேலும் தகவல் கொடுக்கப்பவர்கள் விபரங்கள் எதுவும் வாங்க போவதில்லை. உணவு மருந்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் எட்டு குழுக்கள் தினமும் 30 திற்க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து கடைக்கு சீல் வைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மெத்தனால் ஒரு துளி கூட தொழிற்சாலை விட்டு வெளியேறவில்லை. அனுமதி கொடுக்கப்பட்ட
14 தொழிற்சாலைகளில் கையிருப்பு சரியாக உள்ளது.

டாஸ்மாக் மதுபான வகைகள் அனுமதித்த நேரத்தை தாண்டி மற்ற இடங்களில் இரண்டாம் கட்ட விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக்கில் உள்ள மதுபான வகைகளையும் இருப்பு விவரங்கள் சேகரிக்கப்பட்டடு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் அனைத்து கோணங்களிலும் நடவடிக்கை முடுக்கிவிட்டு சோதனை நடைபெற்று வருகிறது. உரிமை இல்லாத பார் குறித்த தகவல் வந்தால் அவை மூடி சீல் வைக்கப்படும் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்