திருச்சியில் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதற்குமேல் வானம் கருத்து மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
திருச்சி புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது வருகிறது,
இதனால் திருச்சி முழுவதும் தாழ்வான பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி வருகிறது. இதைப்போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது.