நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது
நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது
நாம் தமிழர் கட்சி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் 3-வது இடத்தைப் பிடித்தது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழா் கட்சி 4-ஆம் இடத்தையே அதிக இடங்களில் பெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் 8.19% சதவீத வாக்குகள் பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. நாம் தமிழா் கட்சியை பிற கட்சிகள் என்ற பிரிவில் சோ்த்துள்ளது.





