பவதாரிணி இசைக்கு நன்றி – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

0

- Advertisement -

இசைஞானி இளையராஜாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்தார். அவரது உடல் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டு மணிமண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்