கிறிஸ்தவ திருச்சபை ஆலயம் கட்டுவதற்கு 30 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு திருச்சி ஐசிஎப் பேரராயம் சார்பில் பேராயர் பா.ஜான் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

0

கிறிஸ்தவ திருச்சபை ஆலயம் கட்டுவதற்கு 30 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு திருச்சி ஐசிஎப் பேரராயம் சார்பில் பேராயர் பா.ஜான் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ திருச்சபை ஆலயம் கட்டுவதற்கு 30 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு திருச்சி ஐசிஎப் பேராயம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என்று அதன் நிறுவனத் தலைவர் முனைவர் பா ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

 

- Advertisement -

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக கிறிஸ்தவ திருச்சபைகள் ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், மிகவும் சிரமத்துக்குள்ளாக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு நிலையிலே ஆலய கட்டிட பணிக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் அவர்கள் கிறிஸ்துவ திருச்சபை ஆலயங்கள் கட்டுவதற்கு 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு அளித்ததற்கு திருச்சி ஐசிஎப் பேராயும் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாநாடு சிறப்பு கூட்டங்கள் கருத்தரங்கில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தோம்.

 

அதற்கு தமிழக அரசு செவி சாய்த்து உத்தரவிட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைப்பதற்கு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து அதனை கடந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஐந்து ஏக்கராக உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினோம். அதேபோல் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாட்டில் இது சம்பந்தமாக கோரிக்கை வலியுறுத்தி, ஆலயம் கட்டுவதற்கூறிய பிரச்சனையா இருந்தாலும், சரி கல்லறை தோட்டம் அமைப்பதாக இருந்தாலும் சரி, மேலும் திருச்சபைகளுக்கு இடையூறு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி வந்தோம்.

 

அந்த கோரிக்கைகளுக்கெல்லாம் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்கு மீண்டும் ஒரு முறை திருச்சி ஐசிஎப் பேராயம் சார்பிலும், அனைத்து கிறிஸ்துவ போதகர்கள், அனைத்து பாஸ்டர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல ஐந்து ஏக்கர் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைப்பை ஏற்பாடு செய்யப்பட்டு அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை அதற்கும் துரிதமான உத்தரவை தமிழக முதலமைச்சர் செயல்முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். எனவே பல்வேறு நிலையிலே சிறுபான்மை கிறிஸ்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கி வரும் தமிழக அரசுக்கு பாராட்டுகளும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தமது அறிக்கையில் ஐசிஎப் பேராயம் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்