மேதின வரலாற்றை எடுத்துரைத்து அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் வாழ்த்து

0

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்
மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்:

நமது நாட்டில் சர்வதேச தொழிலாளர் தினம்,சுதந்திர தினம்,அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். அதில் சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படிப்பட்ட வரலாறு உண்டு.

- Advertisement -

உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான பலன் கிடைக்கிறதா என்பது இன்றைக்கும் கேள்வி குறியாகவே இருக்கிறது.
இன்றைக்கு 8 மணி வேலை, அடிப்படை ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி, காப்பீடு, பெண்களுக்குப் பணியிடத்தில் கிடைக்கும் உரிமைகள், தொழிற்சங்கங்கள் என நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் மே தினப் போராட்டமே விதையாய் அமைந்ததுதான்.

மே தினத்தின் வரலாற்றை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது நமது கடமையாகும். 1800-ம் ஆண்டு தொழிற்துறை வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் உழைப்பாளர்கள் 20 மணி நேரம் வரை வேலை செய்திகள், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை என பல வகைகளில் சுரண்டப்பட்டனர்.
அப்போது சுரண்டலை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1806-ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கியபோதே, உழைப்பாளர்களை கடினமாக வேலை வாங்கப்பட்டது உலகிற்குத் தெரியவந்தது.

பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழிற்சங்கம் உருவான இரண்டு ஆண்டுகளுக்கு பின்புதான், இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கியது. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக கொண்டுவந்த பெருமையும் இச்சங்கத்துக்கே உண்டு. தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலை நாள் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் பத்து மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

மேதின வரலாற்றை எடுத்துரைத்து அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்: நமது நாட்டில் சர்வதேச தொழிலாளர் தினம்,சுதந்திர தினம்,அன்னையர் தினம், காதலர் தினம் தொடங்கி முட்டாள்கள் தினம் வரை நாம் ஒவ்வொரு தினம் கொண்டாடுகிறோம். அதில் சில தினங்களுக்குப் பின்னால் காரணங்கள் உண்டு. ஆனால் சில தினங்களுக்குப் பின்னால் வரலாறே உண்டு. மே தினத்திற்குப் பின்னால் அப்படிப்பட்ட வரலாறு உண்டு. உழைப்பாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கான பலன் கிடைக்கிறதா என்பது இன்றைக்கும் கேள்வி குறியாகவே இருக்கிறது. இன்றைக்கு 8 மணி வேலை, அடிப்படை ஊதியம், தொழிலாளர் வைப்பு நிதி, காப்பீடு, பெண்களுக்குப் பணியிடத்தில் கிடைக்கும் உரிமைகள், தொழிற்சங்கங்கள் என நாம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்கும் மே தினப் போராட்டமே விதையாய் அமைந்ததுதான். மே தினத்தின் வரலாற்றை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது நமது கடமையாகும். 1800-ம் ஆண்டு தொழிற்துறை வளர்ச்சி அடையத் தொடங்கிய காலகட்டத்தில் உழைப்பாளர்கள் 20 மணி நேரம் வரை வேலை செய்திகள், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமை என பல வகைகளில் சுரண்டப்பட்டனர். அப்போது சுரண்டலை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1806-ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் போராடத் தொடங்கியபோதே, உழைப்பாளர்களை கடினமாக வேலை வாங்கப்பட்டது உலகிற்குத் தெரியவந்தது. பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர்களின் சங்கம்தான் உலகின் முதற் தொழிற்சங்கமாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழிற்சங்கம் உருவான இரண்டு ஆண்டுகளுக்கு பின்புதான், இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கியது. பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன்முதலாக கொண்டுவந்த பெருமையும் இச்சங்கத்துக்கே உண்டு. தொடர் போராட்டத்தின் எதிரொலியாக வேன் பியுரன் தலைமையிலான அமெரிக்க அரசு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலை நாள் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் பத்து மணி நேர வேலையை வலியுறுத்திப் போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளனர். அதன் பிறகு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் எல்லா வளரும் நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1858-ல் ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்துப்  போராடி அதில் வெற்றியும் கண்டனர் என்று மே 1.ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை பற்றி எடுத்துரைத்து அனைவருக்கும் உழைப்பாளர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.அதன் பிறகு குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் எல்லா வளரும் நாடுகளிலும் பரவத் தொடங்கியது. 1858-ல் ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் கட்டிடத் தொழிலாளர்கள் ‘8 மணி நேர வேலை, 8 மணி நேரப் பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு’ என்ற கோரிக்கையை முன்வைத்துப்  போராடி அதில் வெற்றியும் கண்டனர் என்று மே 1.ம் தேதி உழைப்பாளர்கள் தினத்தை பற்றி எடுத்துரைத்து அனைவருக்கும் உழைப்பாளர்கள் தினம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்