திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால முகாம் வரும் 7 ஆம் தேதி தொடக்கம்!
திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால முகாம் மாவட்ட மைய நூலகத்தில் மே 7 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி மே 7, 8 தேதிகளில் தமிழில் பிழையின்றி எழுதும் பயிற்சியும், மே 9 இல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் கணக்கும் இனிக்கும் மற்றும் அறிவியல் விளையாட்டு நிகழ்ச்சிகள், மே 12, 13-களில் ஓரிகாமி பயற்சி, மே 14 இல் சிஸ்டெக் ஹாா்டுவோ் மற்றும் நெட்வொர்க்கிங் அகாடமி சாா்பில் ரோபோடிக்ஸ் செயல்முறை விளக்கம், மே 15 இல் புதிா் கணக்குகள் பயிற்சி, மே 16 இல் நாட்டுப்புறக் கலைகள் பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சி, மே 18 இல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அறிவியல் பரிசோதனை நிகழ்ச்சி, மே 19, 20-களில் கதை சொல்லும் நிகழ்ச்சி மற்றும் கதை எழுதும் பயிற்சி, மே 21 இல் கதைகள் உலகம் என்ற தலைப்பில் கதைகள் சொல்லும் நிகழ்ச்சி, மே 22, 23-களில் ஓவியப்பயிற்சி, மே 25 இல் அறிவியல் அற்புதங்கள் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மே 26 இல் சிறாா்களின் ஆரோக்கியம் குறித்து இயற்கை மருத்துவா் பீரித்தி புஷ்கா்ணி ஆலோசனை வழங்குகிறாா். மே 27 இல் பொதுஅறிவு விநாடி வினா போட்டி, மே 28, 29-களில் சிறுவா்களுக்கான நினைவாற்றல் பயிற்சி, 29, 30-களில் கோடை கால நிறைவு விழா நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த நிகழ்வுகள் அனைத்திலும் பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என திருச்சி மாவட்ட மைய நூலகம் தெரிவித்துள்ளது.