சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரணி

0

சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு இமயம் வேளாண்மை மற்றும்
தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரணி

 

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா இமயம் வேளாண்மை மற்றும்
தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் முசிறி தொகுதி தண்டலைபுதுர் கிராமத்தில் களப்பணி
ஆற்றி வருகின்றனர். சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு சுற்றுசூழல்
பாதுகாப்பு மற்றும் வேளாண்மை முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தண்டலைபுத்தூர், முசிறி தாலுக்கா, திருச்சிராப்பள்ளி மாவட்டம்,தலைமை ஆசிரியர், நா. லதா மற்றும் மாணவர்கள் , ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து
பேரணி நடத்தினர்.

- Advertisement -

பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பில் இப்பேரணி நடத்தப்பட்டது.
பேரணியின் போது அனைவரும் விவசாயம் என்பது வியாபாரம்
அல்ல வாழ்கையின் முறை, விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம்
இல்லையேல் மண்ணிற்கு உரம், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
மற்றும் நெகிழியை தவிர்ப்போம் மண்வளம் காப்போம் ஆகிய வாசகங்கள்
கொண்ட அட்டைகளை ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் பேரணி
வந்தனர். மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அவர்களுக்கு
விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும் இமயம் கல்லூரி
மாணவர்கள்ஏ. பிரேம்குமார்,
அ. கிஷோர்,வெ. மணிகண்டன்,சி. மணிகண்டன்,சை. முகமது அபு சாலிகு,பா. நந்த குமார் ரெ. மனோஜ் வி.செ. மெர்வின் பாலாஜி ரெ. லட்சுமி நாராயணன் வி. பி. லோகேஷ். இணைந்து பூமியின் இன்றைய நிலை குறித்து நாடகம் நடத்தி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு
ஏற்ப்படுத்தினர்.

இறுதியாக மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது. பின் இனிப்புகளுடன் விழா நன்முறையில் நிறைவு
பெற்றது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்