கோடை வெயிலை தனிப்பதற்காக அதிமுக சார்பில் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனியில் அதிமுக ஏர்போர்ட் பகுதி கழகம் சார்பில்
கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏர்போர்ட் பகுதி செயலாளர்
ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன்,
ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் கோடை தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.