திருச்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!
கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர், நுங்கு, இளநீர் மற்றும் பழங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி திருச்சி நீதிமன்றம் அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில்
அமைப்பு செயலாளர் மனோகரன், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திக்கேயன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், கலைவாணன், ராஜேந்திரன், ரோஜர் ,நாகநாதர் பாண்டி, ஏடிபி ராஜேந்தின், முன்னாள் கோட்டத்தலைவரும் ஓட்டுனர் அணி செயலாளருமான ஞானசேகர், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் எம்.எஸ் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் வக்கீல் வரகனேரி சசிகுமார், மாவட்ட இணை செயலாளர் முல்லை சுரேஷ் உள்பட வழக்கறிஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.