திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ₹.10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

0

- Advertisement -

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், இங்கிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்திச் செல்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

- Advertisement -

அப்போது ஆண் பயணி ஒருவரது பையில் ரூபாய் 4,96,200 மதிப்புடைய 6000 அமெரிக்க டாலர்களும், ரூபாய் 18,997 மதிப்புடைய 1100 மலேசிய ரிங்கிட்களும் மற்றும் 5,50,000 இந்திய ரூபாயையும் மறைத்து கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து ரூ. 10,65,197 மதிப்புடைய கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்