பாஜக பிரமுகரை அரசு வாகனத்தில் ஏற்றி வலம் வந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
பாஜக பிரமுகரை அரசு வாகனத்தில் ஏற்றி வலம் வந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்
பிஜேபி ஆதரவாளரை காவல் வாகனத்தில் ஏற்றி வலம் வந்ததாக எழுந்த புகாரின் பேரில் திருச்சிமாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ரகுராமன்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருவெள்ளறை பகுதியைச் சேர்ந்த பிஜேபி ஆதரவாளர் ஒருவரை காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆய்வாளர் ரகுராமன் வலம் வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்றைய தினம் திருவெள்ளறையில் இருந்து தீராப்பாளையம் வாக்குச்சாவடிக்கும் பிஜேபி ஆதரவளரை மீண்டும் காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் காவல் ஆய்வாளர் ரகுராமனை ஆயுதபடைக்கு பணி மாற்றம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.