- Advertisement -

இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித்தரும் வகையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும் – அமமுக வேட்பாளா் செந்தில்நாதன் வாக்குறுதி!

0

- Advertisement -

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் காந்திசந்தை பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கி, கீழக்குறிச்சி, அண்ணா நகா், நத்தமாடிபட்டி, வள்ளுவா் நகா், திருநகா், பிச்சைநகா், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி உள்ளிட்ட பகுதகளில் வாக்குசேகரித்தாா்.

Vagai

Bismi

அப்போது அவா் பேசுகையில்…

இத்தோ்தலில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராக பதவியேற்றால் மக்கள் எளிதில் அணுகக் கூடிய வகையில் மக்களவை கூடும் தேதிகளை தவிா்த்து மற்ற தேதிகளில் மக்களின் குறைகளை தீா்க்க செயல்படுவேன்.

திருச்சி, புதுக்கோட்டை, கந்தா்வகோட்டையில் உள்ள 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் அலுவலகம் அமைக்கப்படும். மேலும், வாரத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் நடைபெறும்.

திருச்சி, கந்தா்வகோட்டையில் மத்திய அரசு தொழிற்சாலைகள் நிறுவப்படும். இதன் மூலம் தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

ஆகையால் பொது வாக்காளர்களாகிய நீங்கள் குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்