திருச்சி இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா!

0

மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பல்வேறு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரம் செய்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா, தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று வேட்பாளர் கருப்பையா திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து தனது பிரச்சாரத்தை துவங்கினார். அங்கிருந்து ஆர்.எம்.எஸ் காலனி, விஸ்வாஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இளங்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து மாட்டு வண்டியில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாட்டு வண்டியினை ஓட்டினார். மாட்டு வண்டியில் நின்றவாறு வேட்பாளர் கருப்பையா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்பி ரத்தினவேல், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிமுக மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்