திருச்சியில் முக்கிய கட்சிகளை தெறிக்க விடும் சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்!

0

மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களிலும் வார்த்தைப் போர்களும், மக்களை கவரும்படியான விநோத பிரச்சாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டத்தை கூட்டி பிரதான கட்சிகள் தங்களது பலத்தை நிரூபித்து வருகின்றன.

இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் ஆதரவோடு சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார் பத்மஶ்ரீ தாமோதரன். இவருக்கு தேர்தல் ஆணையம் கேஸ் ஸ்டவ் சின்னம் ஒதுக்கியுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர் தாமோதரன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் இன்று திருச்சி கன்டோன்மென்ட், பீமநகர், மார்சிங் பேட்டை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம், செங்குளம் காலணி, காஜாமலை காலணி, எடமலைப்பட்டி புதூர், கே.கே.நகர், சாத்தனூர், ஓலையூர், குண்டூர், மாத்தூர், ஏர்போர்ட், பொன்மலைப் பட்டி, ஜெயில் கார்னர் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் தாமோதரன் பேசுகையில்…

திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பால்பண்ணை – துவாக்குடி சர்வீஸ் சாலை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அரை வட்ட சாலை அமைக்கப்படும். நமது மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் பாராளுமன்றத்தில் முன் வைத்து இந்த தொகுதியின் மேம்பாட்டிற்காக பாடுபடுவேன். இந்தியாவிலேயே திருச்சி பாராளுமன்ற தொகுதியை முதன்மையானதாக மாற்றுவேன் என தெரிவித்தார்.

தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் எல்லாம் வாகனத்தில் டாட்டா காட்டிக் கொண்டு ஓட்டு கேட்டு செல்லும் இந்த காலத்தில், வேட்பாளர் தாமோதரன் வீடு, வீடாக சென்று பொது மக்களின் குறைகளை கேட்டு அவர்களிடம் வாக்கு சேகரித்தது பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்