₹.1000 கோடி மதிப்பில் பெரம்பலூர்-துறையூர் வழியாக ரயில் வழித்தடம் அமைக்கப்படும் – பாரிவேந்தர் வாக்குறுதி!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட சோபனாபுரம் பகுதியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்….
1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் வழியாக ரயில் வழி தடத்திற்க்கு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு வரும் 2024 ஆம் ஆண்டு பட்ஜட் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கப்படும் என்று இரயில்வே அமைச்சர் உறுதி கூறி உள்ளார்.
மேலும் 1200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கியுள்ளேன். இந்த முறை எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் 1500- குடும்பங்களுக்கு ரூ.10-லட்சம் மதிப்பிலான உயர் மருத்துவ சிக்கிச்சை இலவசமாக வழங்குவேன்.
மேலும், 70 அமைச்சர்கள் உள்ள மோடி அமைச்சரவையில் ஒருவர் கூட ஊழல் செய்யவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். ஒரு சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.
இன்னும் சிறிது காலத்திற்குள் அனைவரும் உள்ளே செல்வார்கள். எனவே, மறந்தும் சூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டாம், தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.