திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு!
திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024-ஐ முன்னிட்டு திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மற்றும் தேர்தல் பார்வையாளர் (காவல்) அமித்குமார் விஸ்வகர்மா ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.