தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சமயபுரம் நகர திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமயபுரம் நகர திமுக மற்றும் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் துரை ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன், கவுன்சிலர் பிரவீன் மற்றும் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.