எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், வரும் 24 ஆம் தேதி  40 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திருச்சியில் அறிமுகம் செய்ய உள்ளனர் – முன்னாள் அமைச்சர் முனுசாமி திருச்சியில் பேட்டி!

0

- Advertisement -

மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். வருகிற 24 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
24 ஆம் தேதி திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், மேடை ஏற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, எஸ்.பி‌.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் முனுசாமி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்….அவர் கூறுகையில்…
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், வரும் 24 ஆம் தேதி, 40 மகக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளனர். தே.மு.தி.க., அதிமுக கூட்டணியில் இடம் பெறுமா என்பதை பொருத்திருந்து பாருங்கள்.
பிரதமர் மோடி கோவையில் பங்கேற்ற  பேரணியில், மாணவர்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது என்ற கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார்.

- Advertisement -

இப்போது, ஜெயலலிதாவை புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, அந்த கட்சியின் மாநில தலைவர் எம்.ஜி.ஆர்,  ஜெயலலிதா மட்டுமின்றி அண்ணாத்துரை போன்றவர்களையும் இகழ்ந்து பேசிய போது, ஏன் கண்டிக்கவில்லை.
திருச்சி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அ.தி.மு.க., கூட்டணிக்கு வருவதாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டு, திடீரென கூட்டணி மாறிய பா.ம.க வுக்கு தர்மம் நல்ல பதிலை கொடுக்கும்.
மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான தேர்தலாக இருப்பதாலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டி இருப்பதாலும், தி.மு.க ஆட்சியில் மக்கள் படும் அவதிகளை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வோம்.
ஒரு பலமான இயக்கத்துக்கு, கூட்டணி தேவைப்படும் நேரத்தில் ஏற்றுக் கொள்வோம். கூட்டணியில் சேர விரும்பாதபட்சத்தில், எங்கள் பலத்தையே வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தான் அ.தி.மு.க வரலாறு. பல தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து இருக்கிறோம்.
எந்தக் காலத்திலும், எந்த காரணத்துக்காகவும் கட்சி அழிவதற்கு துணையாக இருக்க மாட்டேன், என்று கூறிய பன்னீர்செல்வம், அ.தி.மு.க சின்னத்தை பயன்படுத்தக் கூடாது, என்று நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், ‘எங்களுக்கு கிடைக்காவிட்டால், அந்த சின்னத்தை முடக்குங்கள்’ என்று கூறுகிறார். இதிலிருந்தே அவர் எவ்வளவு பெரிய சுயநலவாதி என்று தெரிகிறது.
அ.தி.மு.க., 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியால் தான் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தேர்தல் முடிவுக்கு பின், யார் யாரோடு மோதி வெற்றி பெற்றனர் என்பது தெரியும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்