திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

0

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 20 தேதி) துவங்குகிறது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியை சேர்த்து 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. ஆனால் இதுவரை எந்ததெந்த தொகுதிகள் என்பது முடிவாகாமல் இழுப்பறியில் இருந்தது வந்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர்
செல்வ பெருந்தகை, 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல், திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக.,வுக்கு ஒரு தொகுதி ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி லோக்சபா தொகுதியை இன்று திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. இந்த திருச்சி தொகுதி கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்