ஸ்டார் டா செயலியின் சார்பில் சினிமா துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது!

0

ஸ்டார் டா செயலி மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து நடத்திய நடிப்புத் திறமைக்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. ஸ்டார் டா செயலியின் முதன்மை செயல் அதிகாரி நரேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இது குறித்து ஸ்டார் டா செயலியின் முதன்மை செயல் அதிகாரி நரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்…

இந்தியாவில் பலருக்கு நடிப்பு, நடனம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதனை வெளிக்காட்ட சரியான தளம் அமையவில்லை. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஸ்டார் டா செயலி. இந்த செயலியில் கலைஞர்கள் தங்களது பெயர் புகைப்பட விவரத்தினை பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் எங்களிடம் தொடர்பில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மூலம் இவர்களுக்கான வாய்ப்பு பெற்று தரப்படும். இந்த செயலியில் இதுவரை 33 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட 9 மாவட்டங்களில் மெகா ஆடிஷன் நடத்தி வருகிறோம். திருச்சியில் இந்த ஆடிஷன் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்பதிவு செய்து, நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் திறமை உள்ள கலைஞர்கள், சினிமா ஆசை உள்ள இளைஞர்கள் சென்னைக்கு சென்று வாய்ப்பு தேடி அலைகின்றனர். அவர்களுக்காக நாங்கள் அவர்களது மாவட்டத்திற்கு வந்து ஆடிஷன் வைத்து அவர்களுக்கு உரிய வாய்ப்பை பெற்று தருகிறோம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்