சர்வதேச சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
சர்வதேச சிலம்பப் போட்டி கடந்த 3 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சார்ந்த 400 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 5 தங்கம், 23 வெள்ளி, 12 வெண்கல பதங்களை வென்றுள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் மலேசிய நாட்டில் தொடர்ந்து சிலம்பம் சுற்றியவாரு 5 கிலோ மீட்டர் பின்னோக்கி நடந்து உலக சாதனை படைத்து, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இவர்கள் நாடு திரும்பினர். இவர்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்ற மாணவர்களை திருச்சியில் உள்ள தனது வீட்டிற்கு நேரில் அழைத்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.