- Advertisement -

திருச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹.79.05 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி – அமைச்சர்கள் பங்கேற்பு!

1

- Advertisement -

ஈரோடு மாவட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவ்விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 1325 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 79.05 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன் மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ் குமார் மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்