திருச்சி காந்தி மார்கெட்டில் ₹.13.49 கோடி மதிப்பில் புதிய மீன் மற்றும் இறைச்சி கூடம் – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!




திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மார்கெட் பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ₹.13.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் மற்றும் இறைச்சி அங்காடி வணிக வளாகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




