செஞ்சுருள் சங்கம் சார்பில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தன்னார்வ இரத்ததான முகாமானது அரசு மற்றும் தனியார் இரத்ததான வங்கிகளுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டிற்கான இரத்ததான முகாமானது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
செஞ்சுருள் சங்கம், பிஷப் ஹீபர் கல்லூரியின் விலங்கியல் துறை, கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைப்பெற்ற இந்த இரத்ததான முகாமை கல்லூரியின் விரிவாக்கப் புலத்துறை தலைவர் முனைவர் ஆனந்த் கிதியோன் தொடங்கி வைத்தார். விலங்கியல் துறை தலைவர் முனைவர் பிரிசில்லா சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்று ரத்ததானத்தில் கலந்து கொண்டனர். சுமார் 70 க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாவரவியல் துறை தலைவர் பேராசிரியை ஜெர்லின் ராணி, விலங்கியல் துறை பேராசிரியை புவனேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.