பாஜக திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா!
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா, பாஜக திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில், பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் புரட்சி கவிதாசன், இணை அமைப்பாளர்கள் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் மற்றும் ஒண்டி முத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில இணை பொருளாளருமான சிவ சுப்பிரமணியன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் லீமா சிவகுமார், இணை அமைப்பாளர் சந்துரு, மேற்கு தொகுதி பொறுப்பாளர் புவனேஸ்வரி, அமைப்பாளர் கௌதம் நாகராஜ், இணை அமைப்பாளர் காளீஸ்வரன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெயகருணா, அமைப்பாளர் ராஜேஷ் குமார், இணை அமைப்பாளர் சர்வேஸ்வரன், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற பொறுப்பாளர் செல்வதுரை, அமைப்பாளர் எஸ்.பி.சரவணன், இணை அமைப்பாளர் சிட்டிபாபு, மாவட்ட பொதுச் செயலாளர் பொன் தண்டபாணி மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.