திருச்சியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது!

0

- Advertisement -

திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஸ்டேசன் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் லேத் பட்டறையில் சட்டத்திற்கு விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு  கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில் பழைய ஏர் பிஸ்டல் ஒன்றும், அதற்கு பயன்படுத்தக்கூடிய ஈய தோட்டாக்களும், வீச்சு அரிவாள் 1, பெரிய பட்டா கத்தி 1 போன்ற பயங்கர ஆயுதங்களை சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த திருச்சி குமரன் நகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவரின் மகன் அப்துல் ஹமீது (34) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் இவர் மீது தொட்டியம் காவல் நிலையத்தில் குட்கா கடத்தி வந்த வாகனத்தை ஆயுதத்தை  காட்டி மிரட்டி கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அப்துல் ஹமீது கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபருடனும், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த அப்துல் நாசர் என்பவரின் மகன் ஜியாவுதீன் (வயது 38) என்பவருடனும் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் ஜியாவுதீன் என்பவரிடமிருந்து ஒரு ஏர்பிஸ்டல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்துல் ஹமீது, ஜியாவுதீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்