- Advertisement -

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – தொழிலதிபர் அருண் நேரு பங்கேற்பு!

0

- Advertisement -

கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

Bismi

Vagai

இதில் திருச்சி 53 வது வட்ட கழக திமுக சார்பில், ஒத்தக்கடை குதுப்பா பள்ளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு கலந்து கொண்டு வேஷ்டி, சட்டை, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 2000 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், 53 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, 53 வது வட்ட கழக செயலாளர் தனசேகரன் உள்பட நிர்வாகிகள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்