கேப்டன் விஜயகாந்த் 30வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது – எம்.எல்.ஏ.கதிரவன் பங்கேற்பு

0

கேப்டன் விஜயகாந்த் 30வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது – எம்.எல்.ஏ.கதிரவன் பங்கேற்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு நாளை ஒட்டி, திருச்சி வடக்கு மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே. எஸ். குமார் தலைமையில்,
அமைதி ஊர்வலம் மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சமயபுரத்தில் நடைபெற்றது.

- Advertisement -

சா.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் படத்திற்கு மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள்.
பின்பு அங்கிருந்து அமைதி ஊர்வலமாக சென்று சமயபுரம் நான்கு ரோட்டில் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில்
தேமுதிக மாவட்ட அவை தலைவர் லா. நா.முருகேசன் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் சடகோபன், சிவக்குமார், மகாமுனி, செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர் ரமணா ஆர். பார்த்திபன், மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.பி. தங்கமணி,மேற்கு ஒன்றிய செயலாளர் வி.டி .சுதாகரன், துறையூர் சதீஷ்குமார், தொண்டரணி துணைச் செயலாளர் ஆனந்தராஜ், சா.கண்ணனூர் பேரூர் கழக செயலாளர் பி.ராஜா, மண்ணச்சநல்லூர் பேரூர் கழக செயலாளர் ஜனனி ஆறுமுகம், சமயபுரம் நகர நிர்வாகிகள் அங்குராஜ், சிவா,சத்தியேந்திரன், பி.பி.ராஜா, எம். ராஜா, கனகராஜ், தனபால், கோபாலகிருஷ்ணன் மற்றும் அணி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கழக உடன்பிறப்புகள் மற்றும் திமுக, பாஜக ,தாமாக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ச.ம.க, நா.த.க, அனைத்து கட்சி நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்