மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

0

அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார். பின்னர் திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களும் சென்றார். ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, இங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, அதன் பின் 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இந்த நிலையில், மீண்டும் பிரதமர் தமிழகம் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்கான அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநில பொதுச்செயலாளர்கள் ஏ.பி.முருகானந்தம், மலர்க்கொடி மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், அன்றைய தினம் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்