திருச்சி காவேரி ஆற்றில் சாமி சிலை கண்டெடுப்பு
திருச்சி காவேரி ஆற்றில்
சாமி சிலை கண்டெடுப்பு
திருச்சி காவிரி ஆற்றில் பாதி மூழ்கிய நிலையில்
சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை கடத்திவரப்பட்டு காவேரி ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மேல சிந்தாமணி – மாம்பழச்சாலையை இணைக்கும் காவிரி பாலத்தின் அடியில் இடுப்பளவு ஓடும் தண்ணீரில் பாதி
மூழ்கிய நிலையில்
சுமார் மூன்றடி உயரமுடைய,
கையில் உடைந்த அரிவாள் ஏந்திய நிலையில் மதுரை வீரன் சிலை ஒன்று காணப்பட்டது.
ஆற்றின் நடுவே சிலை வருவதற்கு சாத்தியமில்லை.
எனவே யாரேனும் இந்த சிலையை கடத்தி வந்து ஆற்றில் வீசி விட்டு சென்றார்களா ? எந்த கோயில் சிலை என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த சிலையின் வடிவமைப்பு பழங்கால சிலை வடிவமைப்பை ஒத்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையினர் சிலை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சிலையை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.