அட்டை பெட்டியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ₹.75 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 13.01.24 அன்று கோலாலம்பூரில் இருந்து வந்த படிக் ஏர் மற்றும் ஏர் ஏசியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 பயணிகள் அட்டை பெட்டியின் உள் பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். பின்னர் 3 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.