நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது,

இந்நிகழ்ச்சி நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது மற்றும் மகளிர் அணி மாநில ஆலோசகர் விஜய பிரேமா அவர்களின் ஒருங்கிணைப்பில், மாநில பொருளாளர் பாலமுருகன் முன்னிலையில்,


சேலம் மாவட்டத்தின் தலைவர் பிரவீன் குமார், மகளிர் அணி தலைவி ஜானகி, மாவட்டத் துணைத் தலைவர் அருள் குமார், மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் கலைவாணி, மாவட்டச் செயலாளர் கோகுல்ராஜ், துணைச் செயலாளர் சீனிவாசன், மகளிர் அணி செயலாளர் ரேணுகா ஆகியோரின் ஏற்பாட்டில், சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்டத்தின் தலைவர் அருண்குமார், துணைத் தலைவர் நாகர்ஜூன், செயலாளர் டிராகன்லி, மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் சரவணகுமார், திருப்பூர் மாவட்ட தலைவர் குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,

மேலும் நிகழ்ச்சியில் மகளிர் அணி துணைச் செயலாளர் பிரியதர்ஷினி,
மகளிர் அணி அமைப்பு செயலாளர் மகாலட்சுமி, நளினி, கீதா மற்றும் பன்முக கலைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

