கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட பன்முக கலைஞர்கள் அனைவரும் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர், சிறந்த சமூக சேவகர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழகத்திற்கு மாபெரும் இழப்பு, மக்களிடத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது, அந்த வகையில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் ஆங்காங்கே கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர் அந்த வகையில் பன்முக கலைஞர் நல்வாழ்வு அமைப்பின் நிறுவன தலைவர் வேல்முருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது அவர்களின் ஆலோசனைப்படி, மாநில மகளிர் அணி ஆலோசகர் விஜய பிரேமா அவர்களின் ஒருங்கிணைப்பில்

தர்மபுரி மாவட்டம்
தலைவர் அருண்குமார்,
து.தலைவர் நாகர்ஜூன்,
செயலார் டிரகான் லீ தலைமையில்
தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு மனம் வருந்தி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.

