- Advertisement -

தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் – பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு

0

- Advertisement -

தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் – பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பு

இயல் இசை நாடகம் போன்ற பன்முகக் கலைஞர்களின் நல வாழ்வு குறித்த அமைப்பு, திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது…
திரைப்பட நடிகராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் திறம்பட மக்களுக்கு சேவையாற்றி வந்தவர், சினிமா மற்றும் அரசியல் துறையில் ஜாம்பவான் என்று பெயரெடுத்த நமது புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு இன்று பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நிறுவனர் & தலைவர் வேல்முருகன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பில், திருச்சி மாவட்டத்தின் தலைவர் அன்வர்தீன், திருச்சி மாவட்டத்தின் செயலாளர் ஐயப்பன் அவர்களின் ஏற்பாட்டில், மாநில அமைப்பு செயலாளர் NT.முருகன், திருச்சி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வேலுச்சாமி, திருச்சி மாவட்டம் மக்கள் தொடர்பாளர் இக்பால், வனிதா, ஜெலஸ்டின், பாண்டீஸ்வரி மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து,
திருவுருவப் படத்திற்கு வருத்தத்துடன் மலர் தூவி வணங்கினர்.

Bismi

Vagai

அப்போது அமைப்பின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கூறுகையில் சமூக சேவையிலும், சினிமா துறையிலும் , அரசியல் துறையிலும் ஜாம்பவான் என்ற பெயர் எடுத்த மரியாதைக்குரிய புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக திருச்சியில் திருவுருவ சிலை நிறுவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
அத்துடன் சினிமா மற்றும் நாடக கலைஞர்களுக்கு புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும், அரசியல் துறையில் திறம்பட செயல்பட்டு வந்த புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கொள்கைகளை தெளிவாக மக்கள் புரிந்து கொண்டு செயல்பட்டு இருந்திருந்தால், நமது தமிழகத்திற்கு பல நன்மைகள் நடந்திருக்கும், தமிழக மக்கள் ஒரு நல்ல மனிதரை, ஒரு மகானை, ஒரு ஆசானை இழந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்