நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

0

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார் , அவருக்கு வயது 60, இவர் இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர், இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன்,
போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தில்  இயக்குனர் பாக்யராஜ்  மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சிறிய கதாபாத்திரம், தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழ் சினிமாவில் குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களிடையே கவனம் பெற்றார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார்,
தமிழகத்தில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் மத்தியில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக, அடிச்சுகூட கேப்பாங்க அப்பவும் சொல்லிராதீங்க’ என்கிற இவரது வசனம் மிகப் பிரபலம்,
கடந்த ஆண்டு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 23) இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை அவரது உறவனினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்