கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி எல்.ஐ.சி காலணி பகுதியில் உள்ள தூய அந்திரேயா சி.எஸ்.ஐ ஆலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு மாநில செயலாளர் டாக்டர் சுபேர் கான் ஆகியோர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், வண்ணை அரங்கநாதன், கவிஞர் சல்மா செங்குட்டுவன், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் முகமது சலாம், தலைமை மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அருள்சுந்தரராஜன், மாநகர சிறுபான்மை அணி அமைப்பாளர் இப்ராஹிம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.