திருச்சியில் கொத்தனார் அடித்துக் கொலை!

0

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (55). கொத்தனார் வேலை செய்து வந்த இவருக்கு ராணி என்ற மனைவியும் விஜயகுமார், தர்மா என்ற இரு மகன்களும் ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார் குணசேகர். மது பழக்கத்திற்கு அடிமையான அவர் மதுபோதையில் ஆங்காங்கே கண்ட இடங்களிலும்,சாலை ஒரத்திலும் உறங்குவது வழக்கம். இந்த நிலையில் குணசேகர் நேற்று இரவு உறையூர் ராமலிங்க நகர் அருகே சாலையோரத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் நண்பர்கள் குணசேகரை சரமாரியாக கைகள் மற்றும் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் அடிபட்ட குணசேகரனை நண்பர்கள் அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வந்து பார்த்தபோது குணசேகர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறையூர் போலீசார் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்