திருச்சி அருகே சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில் ரவுடி கைது!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் சாமி கண்ணு மகன் விஷ்ணு (எ) வெங்கடேஷ் (29). இவர் மீது பணம் பறிப்பு அடிதடி தகராறு என பத்து வழக்குகள் ஏற்கனவே உள்ள நிலையில் 11 வது வழக்காக நேற்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்டது.
இதில் திருச்சி மேல கல்கண்டார் கோட்டை வ.உ.சி நகரை சேர்ந்த சுப்பையா மகன் சசிகுமார் (39) இவர் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரிடம் ஏற்கனவே வெங்கடேஷ் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக வெங்கடேஷ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சசிகுமார் தனது சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்த பொழுது வெங்கடேஷ் சசிகுமாரை திட்டியதோடு எங்கிருந்தோ பிழைக்க வந்துவிட்டு என் மீதே புகார் கொடுக்கிறாயா எனக்கூறி ஆபாசமாக திட்டியதோடு தன் கையில் வைத்திருந்த வால் போன்ற கத்தியை காட்டி உன்னை இப்பொழுது கொலை செய்தால் என்ன செய்வாய் என கூறி மிரட்டி உள்ளார். இது சம்பந்தமாக சசிகுமார் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் மீண்டும் வெங்கடேஷ் மீது புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வெங்கடேஷ் மீது வழக்கு பதிவு செய்து வெங்கடேசை கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருவெறும்பூர் பகுதியில் தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்படுவதோடு அவர்கள் மீது போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யும் சம்பவமும் அரங்கேறி வருவதால் ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.