அப்போலோ மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது

0

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME Program) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மூத்த மருத்துவர்கள், இதய நோய் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போலோ மருத்துவமனையின் மதுரை கோட்ட தலைமை செயல்பாட்டு இயக்குனர் நீலகண்ணன் பேசுகையில்..

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிப்பதற்காகவும், நோயாளிகளின் பராமரிப்புக்கும் அப்போலோ மருத்துவமனையின் சேவைகளை பயன்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் சக மருத்துவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் மருத்துவக் கல்வி கவுரவ இயக்குநர் டாக்டர் சென்னியப்பன், இத்தகைய மருத்துவ கல்வி கருத்தரங்குகள் வாயிலாக மருத்துவர்கள் தங்களின் துறை சார்அறிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் சமீப காலத்தில் இதய செயலிழப்பு போன்ற சில இதய நோய்களின் நடைமுறை மற்றும் சிகிச்சை முறைகள் எப்படி மாறி உள்ளது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

அப்போலோ மருத்துவமனையின் திருச்சி பிரிவு தலைவர் மற்றும் இணை துணைத் தலைவர் ஜெயராமன் கூறுகையில்…

டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பல நோயாளிகள் டிரான்ஸ்கேதெட்டர் இதய வால்வு பொருத்துதல் (TAVI),நுண்துளை இதய அறுவை சிகிச்சை (MICS), ஹைப்ரிட் ரீவாஸ்குலரைசேஷன், பச்சிளங் குழந்தை பராமரிப்பு மற்றும் சிக்கலான மின் இயக்கவியல் ஆய்வுகள் உள்ளிட்ட அதிநவீன சேவைகளைப் பயன்படுத்தி பலனடைந்துள்ளனர் என்றார். தொடர்ந்து மருத்துவர்கள் காதர் சாஹிப் அஷ்ரப், ஷியாம் சுந்தர், ரவீந்திரன், ஶ்ரீகாந்த் பூமா, அரவிந்த், சரவணன், ரோஹிணி ஆகியோர் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் சிறப்புகள் குறித்து பேசினர். அதில் தீவிர நோய் பாதிப்புக்கு ஆளாகி நீண்ட தூர பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகள் கூட திருச்சி அப்போலோ மருத்துவமனையில் செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளின் வாயிலாக பயன் அடைந்து வருகின்றனர் என்றும், இதய துடிப்பு பிரச்சினைகளுக்கு ஐசிடி சாதனம் பொருத்துவதில் தொடங்கி 3D மேப்பிங் தொழில்நுட்பம் வரை பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் இதய சிகிச்சை மருத்துவர்களை உள்ளடக்கிய குழு விவாதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. இந்த அமர்வை மூத்த இதயநோய் நிபுணர்கள் டாக்டர். கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஆர்.மணிவாசகம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இறுதியாக மருத்துவ நிர்வாகி டாக்டர் சிவம் நன்றி கூறினார்.

 

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்