திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய அலுவலக கட்டடங்கள் – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பட்டூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ₹. 31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருக்கோவில் அலுவலக கட்டடமும், ₹.89.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அன்னதான கூடமும் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்து பொது மக்களுக்கு உணவு பரிமாறினர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி உள்பட இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.