முரசொலி மாறனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை!
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில், முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், பகுதி செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.