தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இயங்கி வருகிறது,
தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயல் இசை நாடக கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது அவர்களின் ஒருங்கிணைப்பில், நிறுவனர் & தலைவர் வேல்முருகன் தலைமையில், பொதுச் செயலாளர் பழனி முருகன், பொருளாளர் பாலமுருகன், துணை ஒருங்கிணைப்பாளர் சுபேர்தீன் முன்னிலையில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய பிரேமா அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தர்மபுரி மாவட்ட தலைவர் அருண்குமார், துணை தலைவர் நாகார்ஜுன் மற்றும் செயலாளர், டிராகன் லீ , ஆகியோர் பன்முக கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.