- Advertisement -

நடிகர் மாரிமுத்துவின் குழந்தைகளை படிக்க வைத்த அஜித் – சகோதரர் பேட்டி

0

- Advertisement -

நடிகர் மாரிமுத்துவின் குழந்தைகளை படிக்க வைத்த அஜித் – சகோதரர் பேட்டி

Bismi

‘எதிர்நீச்சல்’ சின்னத்திரை தொடர் மூலம் பெண்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து. இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் சீமான், மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். வைரமுத்துவிடமும் உதவியாளாராக இருந்துள்ளார். நடிகர் மாரிமுத்து (58) நேற்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரிமுத்துவின் உடல் இன்று அவரது சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், மாரிமுத்துவின் குழந்தைகளை நடிகர் அஜித் படிக்க வைத்துள்ளார். இது குறித்து மாரிமுத்துவின் சசோதரர் பேசியதாவது, மாரிமுத்து ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்தார். இதை நாங்கள் தாங்கி தான் ஆக வேண்டும். ‘வாலி’ படத்திற்கு பிறகு மாரிமுத்துவின் இரண்டு குழந்தைகளையும் 12-ஆம் வகுப்பு வரை அஜித் தான் படிக்க வைத்தார் என்று பேசினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்