வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

0

வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல்துறை, போலீஸ் பார்வை இதழ் வழங்கும் , வயம் – போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை Police Parvai News YouTube Chenal, Tamilnadu Aero SkatoBall Ball Association, KeeraiDheen YouTube Chenal இணைந்து நடிகர் S.வேல்முருகன் இயக்கத்தில் தயாரித்துள்ளது.

வயம் குறும்படத்தின் வாயிலாக நமது நாட்டின் எதிர்கால தூண்களாக திகழும் மாணவர்கள், போதை பொருட்களுக்கு அடிமையாகி, தனது வாழ்க்கையை சீரழித்து கொள்ளாமல், தனது குடும்பத்தின் உறவுகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதற்க்காக குறும்படம் எடுத்துள்ளனர். வயம் குறும்படத்தை பார்ப்பவர்களுக்கு இனிமேல் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது, பயன்படுத்தினால் நமது குடும்பத்திலும் நடந்துவிடும் என்ற உணர்வு வரும் அளவிற்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் நடித்துள்ளனர்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் M.சத்யபிரியா IPS அவர்கள் அனுமதியுடன், வயம் விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தில் காவல் துறை ஆதிகாரிகள் நடித்து தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர், திருச்சி ரமேஷ் அப்பாவாக நடித்துள்ளார், மேலும் குறும்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

- Advertisement -

அத்துடன் வயம் – போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் , போதை மறுவாழ்வு மையங்களில் உள்ள நபர்களுக்கும் புரியும் வகையில் திரையிட்டு, அவர்களின் வாழ்க்கையை புதியபாதையில் மாற்றம் செய்வதற்காக, காவல்துறை உதவியுடன் குறும்பட குழுவினர் ஒளிபரப்பு செய்து வருகின்றனர், அதனை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில், பகுருதீன் அலி அகமது ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பில், VS. பழனி முருகன் முன்னிலையில்,நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் தலைவர் டாக்டர்.கே எஸ் சுப்பையா பாண்டியன், ஜே கே சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார்,முத்தரையர் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சி பி ரமேஷ்,

வயம் குறும்படத்தின் தயாரிப்பாளர்கள் போலீஸ் பார்வை மாத இதழ் ஆசிரியர் டாக்டர் N.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஏரோஸ்கெட்டோபால் சங்கம் தலைவர் ராகேஷ் N.சுப்பிரமணியன், KeeraiDheen யூடியூப் சேனல் நிறுவனத் தலைவர் பகுருதீன் அலி அகமது மற்றும்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் NT.முருகன் என அனைவரும் கலந்து கொண்டு பயம் குறும்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தினர், நிகழ்ச்சியின் இறுதியில் மழலை காலம் விழிப்புணர் குறும்படத்தில் இணைந்து வெளியிட்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்