வீரமுத்திரையர் முன்னேற்ற சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி. நந்தகுமார் பிறந்தநாள் – சமயபுரம் வேலா கருணை இல்லத்தில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!

திருச்சி:
வீரமுத்திரையர் முன்னேற்ற சங்கத்தின் திருச்சி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி. நந்தகுமார் அவர்களின் 25-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமயபுரத்தில் அமைந்துள்ள வேலா கருணை இல்லத்தில் உள்ளோருக்கு காலை உணவு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழா வீரமுத்திரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.எஸ். செல்வகுமார் அவர்களின் ஆசியோடும், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் அவர்களின் நல்வாழ்த்துகளோடும் நடைபெற்றது.

நிகழ்வின் போது வேலா கருணை இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு அறுசுவை காலை உணவு அன்போடு பரிமாறப்பட்டது.
தொடர்ந்து, இல்லத்தின் நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் பேசுகையில்:
“எங்களோடு இணைந்து தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடி, அன்போடு காலை உணவு வழங்கிய திரு. எஸ்.பி. நந்தகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரும் அவரது குடும்பத்தினரும் இறைவனின் திருவருளால் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என்று கூறி, கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இவ்விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
#VeeramuthirayarMunnetraSangam #TrichyNews #KKSSelvakumar #SBNanthakumar #BirthdayCelebration #Annadhanam #Samayapuram #VelaKarunaiIllam #SocialService #TamilNaduNews





Comments are closed.