- Advertisement -

திருமயத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்: ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்!

Bismi

திருமயம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஃபோர்ட் ரோட்டரி சங்கம், பாக்கியம் பவுண்டேஷன் மற்றும் திருச்சி உறையூர் சி.எஸ்.ஐ. மிஷன் பொது மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருமயம் ஊராட்சி மன்றம் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, பாக்கியம் பவுண்டேஷன் இயக்குநர் Rtn. ஸ்டாலின் பாக்யராஜ் தலைமை வகித்தார். திருமயம் ஃபோர்ட் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn. M. பால்ராஜ் முகாமை முறைப்படி துவக்கி வைத்தார்.

Vagai

- Advertisement -

முகாமில் கலந்துகொண்டு அர்ப்பணிப்புடன் மருத்துவச் சேவையாற்றிய மருத்துவர்கள், மருத்துவ உதவி அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருமயம் ஃபோர்ட் ரோட்டரி சங்கப் பட்டயத் தலைவர் PP. PHF. K. கபூர், செயலாளர் இறை ஒளி, Rtn. சுப. ராசு, பொருளாளர் Rtn. முகமது அப்துல் காதர், அறிவுத் திருக்கோவில் தலைவர் Rtn. சுப்பிரமணியன், ஏ.எஸ்.ஜே. சுரேஷ், ஆறு. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பாக்கியம் பவுண்டேஷன் குடும்பத்தினர், ஃபோர்ட் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

முகாமில் பொதுமக்களுக்குப் பொது மருத்துவம், இரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டன.

 

#Thirumayam #MedicalCamp #FreeMedicalCamp #RotaryClub #FortRotary #BakkiyamFoundation #CSIMissionHospital #Pudukkottai #Trichy #HealthCare #PublicService #CommunityHealth #TamilNaduNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்