50 நாட்களுக்கும் மேலாகப் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்: 500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு என சங்கரன்கோவிலில் விவசாயிகள் மனு!

50 நாட்களுக்கும் மேலாகப் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்: 500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு என சங்கரன்கோவிலில் விவசாயிகள் மனு!

தென்காசி:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா, வடக்குப்புதூர் மற்றும் கரிசல்குளம் பகுதி விவசாயிகள் மின்சார வசதியின்றித் தவித்து வருவதாக மின்வாரிய செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வடக்குப்புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி எஸ். விஜயகுமார் மற்றும் கரிசல்குளம் விவசாயிகள் சார்பில் சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளரிடம் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வடக்குப்புதூர் – கரிசல்குளம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ‘வடக்குப்புதூர் SS2’ எண் கொண்ட மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 50 நாட்களுக்கும் மேலாகப் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றியை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்பட்டு வரும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பயிர்கள் நீரின்றி கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாகச் சரிசெய்து தர வேண்டும் என மனுவில் மிகத் தாழ்மையுடன் வலியுறுத்தப்பட்டுள்ளது.
#Tenkasi #Sankarankovil #Vadakkupudur #TNEB #FarmersProtest #AgricultureIssues #ElectricityIssue #TamilNaduNews #FarmerGrievance





Comments are closed.