- Advertisement -

திருச்சியில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் சர்ச்சை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அலைக்கழித்ததால் கோபத்துடன் வெளியேறிய விஜய் டிவி புகழ் மதுரை முத்து!

Bismi

திருச்சியில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் சர்ச்சை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அலைக்கழித்ததால் கோபத்துடன் வெளியேறிய விஜய் டிவி புகழ் மதுரை முத்து!

 

​திருச்சி:

​திருச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் ‘ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவகங்களின் வீதி’ தொடக்க விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

Vagai

​இந்நிகழ்ச்சியில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு. கோ.க. அருண் ராஜ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி. ரமேஷ், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

 

​மதுரை முத்து பட்டிமன்றத்தில் குழப்பம்:

​அரசுத் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியாக, பொதுமக்களைக் கவரும் வகையில் விஜய் டிவி புகழ் நகைச்சுவைப் பேச்சாளர் மதுரை முத்துவின் பட்டிமன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மதுரை முத்து தனது பட்டிமன்றக் குழுவினருடன் மதியமே விழா அரங்கிற்கு வருகை தந்தார்.

- Advertisement -

​இருப்பினும், பட்டிமன்றம் நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான நேரத்தை ஒதுக்காமல் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மதியத்தில் இருந்து “இதோ இப்போது தொடங்கிவிடலாம், அடுத்ததாக தொடங்கிவிடலாம்” எனக் கூறி மதுரை முத்துவின் குழுவினரைத் தொடர்ந்து காத்திருக்க வைத்து அலைக்கழித்ததாகத் தெரிகிறது.

 

​”நேரம் ஒதுக்கி கூப்பிடுங்கள்” – கோபத்துடன் காரில் ஏறிப் புறப்பட்ட மதுரை முத்து:

​நீண்ட நேரம் காத்திருந்தும் பட்டிமன்றத்திற்கு உரிய நேரம் ஒதுக்கப்படாததால் கடும் அதிருப்தியும் மன உளைச்சலும் அடைந்த மதுரை முத்து, ஏற்பாட்டாளர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்தார்.

 

​”சரியான நேரத்தை ஒதுக்கிவிட்டு முறைப்படி அழையுங்கள்; அப்படி அழைக்காவிட்டாலும் பரவாயில்லை” என்று விழா மேடையிலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு, தனது குழுவினருடன் உடனடியாக காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார். அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில் பிரபலக் கலைஞர் ஒருவர் அதிருப்தியடைந்து வெளியேறிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

​கலைஞர்களுக்கு உரிய மரியாதை அவசியம்:

​அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குக் கலைஞர்களை அழைக்கும்போது, அவர்களது நேரத்திற்கும் கலைக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து மன நோகும்படி நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் சமூக ஆர்வலர்களும் கலை ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

#TrichyNews #MaduraiMuthu #Pattimandram #VijayTV #TamilNaduNews #HealthDepartment #FoodSafetyDepartment #Controversy #TrichyEvents #TamilNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்